இந்தியாவில் ஜிஎஸ்டி இம்மாதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது!

Advertisements

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 கோடி ரூபாய், ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு ரூ.11,188 கோடியும், புதுச்சேரியில் ரூ.252 கோடியும் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.1 சதவீதம் அதிகமாக உள்ளது. 8வது முறையாக மாதந்திர ஜிஎஸ்டி வரி வசூல்ரூ.1.70 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு பொருளாதார நடவடிக்கை மற்றும் வரி வசூல் முறை சிறப்பாக செயல்படுவதை வெளிப்படுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *