தொடரும் வருமான வரித்துறையினர் சோதனை!
நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: சென்னையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த நிலையில் இன்று 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு இல்லம், பூந்தமல்லி சவீதா கல்வி குழுமம் உள்ளிட்ட ஜெகத்ரட்சகன் தொடர்புடையை 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.

