தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்ட 956 புதிய வகுப்பறை கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 264 கோடி ரூபாய் செலவில் கட்டிய 956 புதிய வகுப்பறைக் கட்டடங்களை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, தகைசால் பள்ளிகளில் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், 12 ஆய்வகக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும், திருவண்ணாமலையில் முதன்மை கல்வி அலுவலகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

