பெண்களை மனிதராகவே பார்க்கவில்லை! உதயநிதியை சாடிய ஆதவ் அர்ஜுனா.!

Advertisements
எதிர்க்கட்சித் தலைவர் பெண்களைச் சக மனிதராகக் கூடக் கருதவில்லை என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அருகே பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய போது, தவெக ஆட்சி அமைந்த 80 நாட்களில் திமுகவின் ஒரே கொள்கையே, தவெக ஆட்சியை எப்படி கவிழ்ப்பது என்பது தான் என்று தெரிவித்தார். கொளத்தூர் மக்கள் ஏன் தன்னை தூக்கி எறிந்தார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றும், கொளத்தூர் சென்ற முதலமைச்சர் விஜய்யால் அன்று சேப்பாக்கம் செல்ல முடியாமல் போனது, அதனால் சேப்பாக்கம் மிஸ் ஆகிவிட்டது என்றும் விமர்சித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேச தொடங்கி பார்ட்டி பண்ட் எனக் கூறியவுடன் திமுகவினர் ஓடி விட்டதாகத் தெரிவித்தார். எதிர்காலமே இல்லாத திமுக கட்சி, தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலை பேச முயற்சித்து மாட்டிக்கொண்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், உதயநிதி  பெண்களைச் சக மனிதராகக் கூடக் கருதவில்லை என்று கடுமையாக சாடியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *