Advertisements

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த புதிய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வினவியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், விழுப்புரம் – மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக, நாள்தோறும் இதுபோன்று வரும் செய்திகளால் தமிழ்நாட்டிலுள்ள பெண்களும் குழந்தைகளும் கடும் அச்சத்தில் உறைந்து போயுள்ளதாகத் தெரிவித்தார். சட்ட ஒழுங்கு சீர்கெட்டிருப்பதை ஒப்புக்கொண்டு, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்த புதிய அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று வினவினார்.
Advertisements


