Amma Hotel : அம்மா உணவகத்தை ஆய்வு செய்வது ஓரு நாடகம் – எடப்பாடி !

Advertisements
சென்னை :
9 அம்மா உணவகங்களை மூடியது ஏன் என , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டதை சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்துவிட்டு, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலைக்கண்ணீர் வடிக்கிறார் என்றும், ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்ட நிலையில், 19 உணவகங்களை மூடியது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், வாய்பந்தல் போடாமல் மூடியுள்ள உணவகங்களை திறப்பதுடன், புதிய உணவகங்களையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *