திமுக மீது சவாரி செய்த காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது – உதயநிதி கண்டனம்.!

Advertisements

தி.மு.க இளைஞர் அணியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் , இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி தங்களுக்குத் துரோகம் இழைத்ததாகவும், முதுகில் குத்தியதாகவும் குற்றம் சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த அதிரடி நிகழ்வு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினரும் , தவெக – வினரும் மின்னல் வேகத்தில் பதிலடியும் குடுத்து வருகிறது.. அதுகுறித்த தகவல்களை தற்பொழுது விரிவாக பார்க்கலாம்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய உதயநிதி , கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி தங்களுக்குத் துரோகம் இழைத்ததாகவும், முதுகில் குத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, இன்றைய சூழலுக்கு ஏற்ப இளைஞரணி சமூக வலைதளங்களில் வேலை செய்து நமது கொள்கைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இளைஞர் அணிக்கு ஒர்க் ஷாப் நடத்த உதயநிதிக்கு அறிவுறுத்துகிறேன் என்று கூறினார்.

தவெக வெற்றிப்பெற்றதுக்கு காரணம், சினிமா கவர்ச்சிக்கு விழுந்த வாக்குகளே தவிர, அரசியல் எழுச்சிக்கானது இல்லை என்று தெரிவித்தார். இந்த சினிமா கவர்ச்சி ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்றும் இரண்டு ஆண்டுகள் கூட இந்த அரசு நீடிக்காது என்றும் கூறினார். குழந்தைகள் அம்மாவை தேடுவது போல மக்கள் கொஞ்ச நாட்களில் நம்மை தேடி வருவார்கள் என்று தெரிவித்தார். அனைவரும் சோர்ந்து போகாமல் வேலையை பாருங்கள் என்று கட்சியினரிடையே அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் தி.மு.க. தொண்டர்கள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்…

அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது என்று கூறி உள்ளனர்..

இந்நிலையில் , இந்த குற்றச்சாட்டுகளுக்கு தனது எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், திமுகவின் செயல்பாடுகளை கடுமையாகச் சாடியுள்ளார். மாணிக்கம் தாகூர் தனது பதிவில், “தேர்தல் முடிவு வந்து கொண்டிருந்த நேரத்திலேயே திமுகவும் அதிமுகவும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பாஜகவுடன் பின்வாசல் அரசியல் செய்பவர்களுடன் கூட்டணி வைப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ராகுல் காந்தியை விமர்சித்து நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம், பாஜக ஆசைப்பட்டபடி விஜய் முதல்வராவதைத் தடுக்கத் தவறியதால் ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடே தவிர வேறில்லை… சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் திமுகவின் செயல்பாடுகளை சந்தேகத்துடன் பார்க்கின்றன” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக இளைஞரணி நிறைவேற்றிய இந்தத் தீர்மானமும், அதற்கு மாணிக்கம் தாகூர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன. தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், மதச்சார்பற்ற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் திமுக, கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை எந்தளவிற்குத் தக்கவைத்துள்ளது என்பது இப்போது அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

இந்த மோதல் போக்கு தற்காலிகமானதா அல்லது நீண்டகால கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள நிரந்தர விரிசலா என்பது வரும் நாட்களில் அமையும் அரசியல் நகர்வுகளின் மூலமே உறுதியாகும். கூட்டணியில் ஏற்பட்டுள்ள இத்தகைய வெளிப்படையான கருத்து வேறுபாடுகள், வரவிருக்கும் அரசியல் களங்களில் திமுகவின் வியூகங்களை எவ்விதத்தில் மாற்றியமைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *