சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் !

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தில் பிரபல இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், “கங்குவா படத்தில் சூர்யாவுக்கு இணையாக ஆளுமைமிக்க வில்லனாக மிரட்டக்கூடிய நடிகரை தேடினோம்.

அப்படி சிந்திக்கும்போது பாபி தியோல் அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று நம்பினோம். கதையை சொன்னதும் அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார்” என்றார்மேலும் அவர் கூறும்போது, இதுவரை பார்க்காத பாபி தியோலை ரசிகர்கள் பார்ப்பது நிச்சயம். அவரது உடல்மொழியிலும், தோற்றத்திலும் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவம் காத்திருக்கிறது.

ஆகஸ்டு மாதம் பாங்காக்கில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் இணைகிறார்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *