ஆசிரியர்களுக்கு டீ கடைக்காரர்களா மாணவர்கள்?

அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களை வைத்து தேநீர் வாங்கியக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த சென்னகுப்பத்தில் உள்ள அரசு அரசு ஆதிதிராவிடர் பள்ளியில், ஆசிரியர்கள் மாணவர்களை தேநீர், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை வாங்கி வர வைத்துள்ளனர். இதுதொடர்பான, வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கோரிக்க விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *