Car Accident: சொகுசு கார் மோதி ஒருவர் பலி!

Advertisements

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதியதில் பாலமுருகன் என்பவர் உயிரிழந்தார். உடன் பயணித்த அவரது நண்பர் ரமேஷ் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (44) அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான ரமேஷ் (44) உடன் காஞ்சிபுரம் அடுத்த ஐயம்பேட்டை பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பாலமுருகனும்  அவரது நண்பர் ரமேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஐயங்கார் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் அதிவேகமாக வந்த BMW சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதி 50 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன், ரமேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலனின்றி பாலமுருகன் உயிரிழந்தார். மேலும் அவரது நண்பர் ரமேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.

இருசக்கர வாகனம் மீது சொகுசு கார் மோதும் பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *