Kanyakumari: பணி நேரத்தில் செய்யுற வேலையா இது.. பொதுமக்கள் கொந்தளிப்பு!

Advertisements

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பொது சுகாதாரத்துறை அலுவலக சுகாதார பணியாளர்கள் பட்ட பகலில் வடசேரி பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடையிலிருந்து மதுபானம் வாங்கி மது அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

இவர்கள் டாஸ்மார்க் கடைக்குப் பனி நேரத்தில் சென்றார்களா ? அல்லது விடுமுறை நாளில் சென்றார்களா ? என்பது முக்கியமல்ல அரசின் மருத்துவ திட்டங்களையும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மருத்துவ உதவிகளையும் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று செய்யும் புனிதமான சேவையைச் செய்து வரும் இவர்களைப் பொது மக்கள் டாஸ்மாக் கடைகளில் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள் ? என்ற கேள்வி பரவலாகி வருகிறது –

நாட்டில் எந்தவிதமான தொற்று நோய்கள் ஏற்பட்டாலும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு சென்று அதனை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களை உரிய மருத்துவமனையில் கொண்டு சேர்க்க வைத்து அந்தத் தொற்றை அந்தப் பகுதியில் பரவாமல் தடுக்க அனைத்து மருத்துவ நடவடிக்கைகளையும் செய்யும் சுகாதார பணியாளர்கள் சமுதாயத்தில் மிக முக்கிய பங்கு வைக்கிறார்கள்.

அரசின் மருத்துவ திட்டங்களையும் மக்களைப் பாதுகாக்க வேண்டிய மருத்துவ உதவிகளையும் அந்தந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று செய்யும் புனிதமான சேவையைச் செய்து வருகிறார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட பொது சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இது போன்ற பெருமை அவர்களுக்குச் சேர்ந்தாலும் சிறுமை ஏற்படுகின்ற வகையில் இன்று ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது பட்டா பகலில் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் உள்ளே சென்று உட்கார்ந்து அவர்கள் மது அருந்தும் வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

இவர்கள் டாஸ்மார்க் கடைக்குப் பணி நேரத்தில் சென்றார்களா ? அல்லது விடுமுறை நாளில் சென்றார்களா ? என்ற கேள்வியுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதைக் கவனிப்பார்களா ? அல்லது இவர்களை மேலும் ஊக்க படுத்துவார்களா ? என்ற கருத்தும் பொது மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது – ஒரு வேளை விடுமுறை நாளாக இருந்தாலும் பொதுமக்களுக்கு நல்வழி காட்டும் பொறுப்பான பதவிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் பட்ட பகலில் டாஸ்மார்க் பாரிலிருந்து மது அருந்துவது ஏற்புடையதா ? என அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் சார்பில் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *