காளியம்மாள் புதிய கட்சி தொடக்கம்: பாஜகவுடன் கூட்டணி.!

Advertisements

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தற்பொழுது புதிய கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார்.  இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி சேர்கிறார் . இது மட்டுமல்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் காளியம்மாள் போட்டியிடுகிறார் .

நாம் தமிழர் கட்சியில் மகளிர் ஒருங்கிணைப்பு பாசறை தலைவியாக தமிழ்நாடு முழுவதும் வலம் வந்தவர் காளியம்மாள். நாகப்பட்டினம் மாவட்டம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த காளியம்மாள் பட்டதாரி பெண்ணாவார் இவருக்கு கணவரும் குழந்தையும் உள்ளனர். நாகப்பட்டினம் பகுதியில் கடுமையான புயல் சூறாவளி சூழ்ந்த நிலையில் சமூக ஆர்வலராக களம் இறங்கியவர் காளியம்மாள் இதன் பின்னர், அவரை சீமான் தான் கண்டுபிடித்து நாம் தமிழர் கட்சியில் இணைத்தார் . இதனை தொடர்ந்து அவரது பேச்சாற்றலால் கட்சியில் முக்கிய பதவி அவருக்கு வழங்கப்பட்டது .

ஆரம்ப காலங்களில் காளியம்மாளின் பேச்சை கேட்பதற்காக இணையதளங்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்தனர்.  பின்னர் ஒரு கட்டத்தில் பொதுக்கூட்ட மேடைகளில் காரசாரமாக பேசிய காளியம்மாளுக்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு பெருகியது. நாம் தமிழர் கட்சி சார்பில் ஒவ்வொரு தேர்தல் சமயங்களிலும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வந்தார் . கடந்த முறை மயிலாடுதுறை தொகுதியில் அவர் போட்டியிட்டபோது ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேலாக வெற்றி பெற்று நாம் தமிழர் கட்சியிலேயே அதிக வாக்குகள் பெற்றவர் என்ற பெருமைக்குரியவர் ஆனார்.

இந்த சூழ்நிலையில்,  நாகப்பட்டினம் பகுதியில் தனக்கென தனிச் செல்வாக்கை தேடி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு நாம் தமிழர் சீமானால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார் . தற்பொழுது காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிறது. ஊடகங்களில் அவர் பேசும் பொழுது நிச்சயமாக நான் ஏதாவது ஒரு கட்சியில் இணைவேன் என்று தெரிவித்து வந்தார் .

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதும் அவர் முதன் முதலாக அதிமுகவுடன் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியது இதன் பின்னர் அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய போகிறார் என்றும் தகவல்கள் வெளிவந்தன. தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரையில் அவர் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் . தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரையில் ஒரு நல்ல பெண் பேச்சாளர் தேவை.  அதே சமயம் பெண்களை ஒருங்கிணைப்பதற்கும் ஒரு பொறுப்பாளர் தேவை என்ற சூழ்நிலை இருந்து வந்தது.

இது மட்டுமல்லாமல் தமிழக வெற்றிக்கழக மேடைகளில் சில பெண்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் காளியம்மாளை சேர்த்துக் கொள்ளலாம் என தமிழக வெற்றி கழகத்தில் முடிவு செய்யப்பட்டது . ஆனால் இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை காளியம்மாள் தவெக இடையே சந்திப்பு தடைபட்டது . தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் புசி ஆனந்து தான் காளியம்மாளை சேர்ப்பதற்கு தடையாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏன் காளியம்மாளைபாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் சேர்க்கக்கூடாது என ஒரு முடிவுக்கு வந்தார். இது தொடர்பாக பாஜக மேலிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே காளியம்மாளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது காளியம்மானும் அதிமுக மற்றும் தவெகவில் இணைய வாய்ப்பு இல்லாததால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து விடலாம் என ஒரு முடிவு செய்து இருந்தார்.

தற்பொழுது காளியம்மாளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளார் . அதன்படி நீங்கள் மட்டும் பாரதிய ஜனதா கட்சியில் வந்து இணைவதை விட ஒரு கட்சியை தொடங்கி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் உங்களுக்கு பின்னால் ஏராளமான பெண்கள் கூட்டத்தின் வாக்குகள் கிடைக்கும் என ஒரு திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து,  காளியம்மாள் ஒரு புதிய கட்சி அல்லது ஒரு புதிய அமைப்பை வெகு விரைவிலேயே அறிவிக்க காத்திருக்கிறார். அந்த அமைப்பு மூலம் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இணைகிறார் . அவருக்குகு பாரதிய ஜனதா கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பும் வழங்கப்படும் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் இருந்து நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என காளியம்மாள் விரும்புகிறார்.

தற்போதைய சூழ்நிலையில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.  இது தொடர்பாகவும் டெல்லி பாஜக மேல் இடத்தில் பேசியிருக்கிறார் . அவர்கள் காளியம்மாளுக்கு நாகப்பட்டினம் தொகுதியை ஒதுக்கி தருவதுடன் மேலும் ஒருவருக்கு வாய்ப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் சில தகவல்களை தெரிவித்தார்.

அவர் பேசும்போது என்னுடைய அரசியல் பயணம் இனி மக்களோடு இருக்கும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தர அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பேன் . நான் மக்களுடைய பிரதிநிதியாக இருப்பேன். அதற்குரிய சூழல் விரைவில் வரும் வேறு கட்சியில் இணைவேனா என்பது பற்றி விரைவில் தெரிவிக்கிறேன் என கூறி இருக்கிறார்.

முன்னதாக நாம் தமிழர் கட்சியில் பணியாற்றும் காலகட்டத்திலேயே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயங்களுக்கும் அங்குள்ள அடிமட்ட பெண்களுக்கும் ஏராளமான உதவிகளை காளியம்மாள் செய்து வந்திருக்கிறார். அந்த வகையில் தான் சில பெண்களுக்கு அவர் இலவசமாக செல்போன்கள் வாங்கி கொடுத்தார் .இந்த விவகாரம் தான் நாம் தமிழர் கட்சியில் பூதாகரமாக வெடித்தது .

எனக்கு தெரியாமல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீ தனியாக பெண்களை வைத்து ஒரு கூட்டத்தை சேர்க்கிறாய் . இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி கேட்டு தான் நாம் தமிழர் சீமான் காளியம்மாளை நீக்கினார் . தற்பொழுது கடந்த ஓராண்டு காலமாக அவர் தனக்கு பின்னால் ஒரு அணியை சேர்ப்பதில் தீவிரமாக வேலைகள் செய்து வந்தார்.  தற்பொழுது நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்களை அவர் தனக்கு ஆதரவாளராக சேர்த்திருப்பதாக தெரிகிறது.

இதன் மூலம்தான் புதிய அமைப்பை ஒன்றை தொடங்கி தலைவர் செயலாளர் பொருளாளர் என பதவிகளை கொடுத்து குறிப்பாக மீனவ சமுதாயத்து பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென காளியம்மாள் நினைக்கிறார்.வருகிற டிசம்பர் மாத இறுதியில் அவர் தனது புதிய கட்சி அல்லது புதிய அமைப்பு பற்றி அறிவிப்பார் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர இருக்கிறார். அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் அவர் தேர்தல் பிரச்சார பயணங்களுக்கும் திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *