கூட்டணி தலைவர் எடப்பாடி தான் – அண்ணாமலை புதிய பரபரப்பு.!

Advertisements

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக மோதல் போக்கை கடைபிடித்து வந்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது முழுக்க முழுக்க எடப்பாடிக்கு ஆதரவாக தலைகீழ் மாற்றமாக பேசத் தொடங்கி இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அவரது தலைமையில் தேமுதிக பாமக போன்ற பல கட்சிகள் கூட்டணி சேருகின்றன என பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கர்நாடக காவல்துறையில் உயர் அதிகாரியாக இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை ஒரு காலகட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அதன் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமை பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி அசுர வேகமாக வளர தொடங்கியது.

இந்த நிலையில் ,  தமிழக பாரதிய ஜனதா கட்சியில் தனக்கென தனியாக ஒரு அணியை சேர்த்து வருகிறார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் டெல்லி பாஜக மேல் இடம் அவரை பதவியில் இருந்து விடுவித்து லண்டனுக்கு படிப்பதற்காக அனுப்பி வைத்தது . பின்னர் அவர் திரும்பி வரும் பொழுது திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவராக அறிவித்தது .

இதனை தொடர்ந்து அண்ணாமலைக்கு டெல்லி உயர் மட்டத்தில் ஏதாவது பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் இன்று வரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் அண்ணாமலை கட்சியை விட்டு விலகுவார் புதிய கட்சியை தொடங்குவார் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன.

அண்ணாமலையுமா வேறு பல புதிய திட்டங்களுடன் அவ்வப்போது கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்தார். இதனை அறிந்த டெல்லி பாஜக மேலிடம் அவரை அவ்வப்போது அழைத்து சமரசம் செய்து வந்தது சமீபத்தில் கூட ஓ பன்னீர்செல்வம் சந்திப்பிற்கு பிறகு அண்ணாமலையையும் அழைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எண்ணம் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. இது தொடர்பாக,  அண்ணாமலை இடம் பேசிய அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி உடன் அனுசரித்துப் போகும் படியும் தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்கு முக்கிய பதவி தருகிறேன் என்றும் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது,

இதன் அடிப்படையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு திரும்பினார் அண்ணாமலை. இதனைத் தொடர்ந்து அவர் கோவையில் உள்ள பீளமேடு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் பல தகவல்களை வெளிப்படுத்தினார். அவர் பேசும்போது அமைச்சர் கே என் நேரு துறையில் முறைகேடுகள் குறித்து , ஏற்கனவே பேசியிருக்கிறோம் . ஆனால் இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறையில் பணி நியமனத்திலும் ஊழல் நடைபெற்று இருக்கிறது.  அதேபோல் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பட்டியலில் 80 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.  எனவே வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் சுத்தமான தேர்தலாக இருக்கும்.

கோவையில் ஓபிஎஸ் அவர்களை ஒரு விழாவில் சந்தித்து பேசிக்கொண்டோம் டிடிவி தினகரன் கோவை வந்தபோது வீட்டிற்கு சாப்பிட அழைத்தேன் உள் அரங்கத்திற்குள் என்ன பேசினோம் என்பதை வெளியே சொல்ல விரும்பவில்லை. இப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார் . தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற வேண்டும்.  தேமுதிக பாமக ஆகிய கட்சிகள் வரும் பொழுது அதிமுக பாஜக கூட்டணி இன்னும் வலிமையாக இருக்கும் இதை தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இன்னமும் நிறைய வலிமையான கட்சிகள் வெளியே இருக்கின்றன வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி இருக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் பேசுவதை நான் தவறாக பார்க்கவில்லை. அதிமுக தலைவர்கள் பேசுவதற்கு உரிமை உண்டு அபித்ஷா விரைவில் சென்னை வருவார் எப்போது வருவார் என்பதை மாநிலத் தலைவர் தகவல் சொல்லுவார் . எங்கள் எல்லோருடைய வலிமையான கருத்து தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற வேண்டும்.  எங்கள் தேசிய தலைவர்களுடன் பூட்டிய அறையில் பேச எங்களுக்கு உரிமை உண்டு என்ன பேசினோம் என்பதை வெளியில் சொன்னால் சரியாக இருக்காது என்றார்.

வருகிற சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரையில் தற்போது இருக்கும் சூழ்நிலையில் 4 முனை போட்டி நிலவுகிறது இதில் 210 தொகுதிகளை வெல்வோம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்லியது போல் அந்த எண் நிச்சயமாக வரும் என நம்பிக்கை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி உடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த அண்ணாமலை தற்போது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு தலைகீழாக மாறி உள்ளார் .

அவர் முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசத் தொடங்கியுள்ளார் என்பது தமிழக அரசியலில் பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் அவர் பேசும்பொழுது தேமுதிக பாமக ஆகியவை கூட்டணியில் சேருகிறது என்ற தகவலையும் தெரிவித்துள்ளார் என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *