Asian Cricket Match : யுஏஇ அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.!

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் யுஏஇ அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாயில், 12 ஆவது ஜூனியர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இந்த, போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏ பிரிவில், இந்தியா, யுஏஇ அணிகள் மோதின. இதில், யுஏஇ அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 433 ரன்கள் குவித்தது. இதில், மிகவும் அதிரடியாக விளையாடி வைபவ் சூர்யவன்ஷி 171 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 434 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய யுஏஇ அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *