

அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே:
ஜென்ம ராசியில் புதன், 9- குரு- ராகு சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் ஏற்படும்.
தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும் நிலை, பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். இம்மாதத்தில் சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 2-ல் இருப்பதாலும் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு பேச்சில் பொறுமையுடன் இருப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது.
புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள்மூலம் அனுகூலப் பலனை அடையலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளைச் சந்திக்க நேர்ந்தாலும் எதையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள்.
கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். வௌயூர் தொடர்புகள்மூலம் அனுகூலம் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கிருந்த பணிசுமை குறைவதுடன் உங்கள் உழைப்பிற்கு ஏற்றப் பலனை அடைவதற்கான வாய்ப்புகள் அமையும்.
திறமைகளுக்கு ஏற்றப் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும்.
பரிகாரம்
பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.
சந்திராஷ்டமம் – 01-09-2023 காலை 09.35 மணி முதல் 03-09-2023 காலை 10.38 மணிவரை மற்றும் 28-09-2023 இரவு 08.28 மணி முதல் 30-09-2023 இரவு 09.10 மணிவரை.

