Sep 2023 Monthly Rasi Palan: மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்


அன்புள்ள மிதுன ராசி நேயர்களே: 

 

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 11-ல் குரு- ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.

எதிர்பாராத உதவிகளும் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.

சிலரின் புதிய வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணமும் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலப் பலன்களை அடைவீர்கள்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளைத் தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்& வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற கூடிய பலம் உண்டாகும்.

பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலப் பலன்களை அடையலாம்.

பல பொதுநலக் காரியங்களுக்காகச் செலவு செய்யும் வாய்ப்பும், ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும்.

பரிகாரம்:

 

 முருக வழிபாடும், விஷ்ணு வழிபாடும் செய்வதும் மிகவும் நல்லது. கிருத்திகை, சஷ்டி, ஏகாதசி போன்ற நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் நற்பலன்களை அடையலாம்.

சந்திராஷ்டமம் – 24-09-2023 இரவு 07.18 மணி முதல் 26-09-2023 இரவு 08.28 மணிவரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *