Advertisements

நடிகர் கார்த்திக்கும் நடிகை தமன்னாவும் இணைந்து நடித்த படம் பையா. மிக அருமையான பொழுதுபோக்கு படமாகவும் காதல் படமாகவும் ரசிகர்களுக்கு விருந்தளித்தது இந்த பையா படம். இந்தத் திரைப்படத்திற்கு பின்னால் கார்த்திக் தமன்னா காதலும்… சிவக்குமார் வீட்டில் எதிர்ப்பும்… முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவுரையும்… இதன் பின்னர் தமன்னாவை கழற்றி விட்டு ரஞ்சனி என்பவரை கார்த்தி கல்யாணம் செய்து கொண்டதும் சினிமாவை மிஞ்சும் விறுவிறுப்பான நிகழ்வாகும்.
நடிகர் சிவகுமாரின் மகனும் இயக்குனர் மணிரத்தினத்திடம் துணை இயக்குனருமாக பணியாற்றிய கார்த்திக் பருத்திவீரன் படம் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் .தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் சகுனி கொம்பன் ஆல் இன் ஆல் அழகுராஜா தோழா பொன்னியின் செல்வன் என ஏராளமான படங்களில் நடித்த கார்த்தி நடிகை தமன்னாவுடன் பையா படத்திலும் சிறுத்தை படத்திலும் நடித்துள்ளார்
நடிகை தமன்னாவை பொருத்தவரையில் தமிழ் தெலுங்கு இந்தி என சுமார் 75 படங்களுக்கும் மேலாக நடித்து புகழ்பெற்றவர் கலைமாமணி விருது பெற்ற தமன்னாவுக்கு 35 வயது ஆகிறது இவர் மும்பையில் பிறந்தவர். தற்பொழுது தமன்னாவுக்கு திருமணமாகாத நிலையில் நடிகர் கார்த்தி கோயம்புத்தூர் சேர்ந்த ரஞ்சனி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு உமையாள் என்ற ஒரு மகள் இருக்கிறார்.
இவர்களது திருமணத்திற்கு முன்பாக கார்த்திக் அண்ணன் சூர்யாவுக்கும் நடிகை ஜோதிகாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்ற நிகழ்வு எல்லோரும் அறிந்தது தான் . ஆனால் நடிகர் கார்த்திக்கும் தமன்னாவும் காதலித்து பின்னர் இருவரும் பிரிந்த கதை வெளியே தெரியாத ரகசியம் ஆகும்
நடிகை ஜோதிகாவின் பெற்றோர்கள் வயது மூப்பின் காரணமாக அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தற்பொழுது சூர்யாவும் ஜோதியாகவும் மும்பையில் குடியேறி இருக்கிறார்கள். முன்னதாக பையா படத்தில் நடித்த போது நடிகர் கார்த்திக் தமன்னா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது இருவரும் ரகசியமாக காதலித்து வந்தனர் இந்த காதல் விவகாரம் சிவகுமாருக்கு தெரிய வந்தது அவர் கார்த்திக்கைஅழைத்து கண்டித்தார்.
ஏற்கனவே ஒரு நடிகை நமது குடும்பத்தில் வந்திருக்கிறார் மேலும் ஒரு நடிகை குடும்பத்தில் சேர்ப்பது நன்றாக இருக்காது என அவர் கண்டித்துள்ளார் அதுவும் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை தனது குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள சிவக்குமார் விரும்பவில்லை
இருந்த போதிலும் நடிகர் கார்த்திக் தமன்னா காதல் ரகசியமாக நடைபெற்று வந்தது . அப்படிப்பட்ட சூழ்நிலையிலா தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையை ஏற்று கார்த்திக் மனம் திரும்பி உள்ளார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பேசும்போது உங்கள் வீட்டில் ஏற்கனவே ஒரு காதல் திருமணம் நடைபெற்றது அதில் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை கார்த்தி நீயாவது உன் அப்பாவின் சந்தோஷத்துக்காக உன் ஜாதியில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்து கொள் என்று ஜெயலலிதா அறிவுரை வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட கார்த்தி தனது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து கோயம்புத்தூரைச் சேர்ந்த சின்னச்சாமி ஜோதி மீனாட்சி என்ற தம்பதியின் மகள் ரஞ்சனியை பேசி முடித்தனர் இவர்களது திருமணம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது . கார்த்திக் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகை தமன்னா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார் அவர் கார்த்திகை மறந்து விட்டாரா இல்லையா என்பது தெரியவில்லை.
Advertisements


