
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான காமராஜரின் 123ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாட்டிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், விடுதலைப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் காமராஜர் என்றும், விடுதலைக்குப் பிறகு நாட்டை உருவாக்குவதில் அவர் மதிப்பு மிக்க தலைவராக விளங்கினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.




