‘ஏமனில், இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், எந்த எல்லை வரை முடியுமோ, அதுவரை முயற்சி செய்து பார்த்தும், ஒன்றும் செய்ய முடியவில்லை’ என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நிமிஷா பிரியா, 36. இவர், மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.பின், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, ‘கிளினிக்’ தொடங்கியுள்ளார்.நிமிஷாவின் வருமானம், கிளினிக்கின் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 2017ல், தலாலுக்கு அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், தலால் உயிரிழந்தார்.
அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்றதாக கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2023ல், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. நிமிஷாவுக்கு நாளை துாக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில்



