All India Nadar Federation: நாடார் சமூகத்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்!

Advertisements

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பினை வலியுறுத்தி  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பலவேறு சமுதாய தலைவர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தில்அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டுமென வலியுறுத்திச் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலாளர் கமல் நாடார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இக்கூட்டத்தின்சிறப்புஅழைப்பாளராகநிறுவனத்தலைவர்சதாநாடார்கலந்துகொண்டுதொண்டர்களிடையே உரையாற்றினார்.இக்கூட்டத்தில் அவர் பேசியபோது கொங்கு மண்டலத்தில் பத்துக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நாடார் இனமக்கள் பெரும்பான்மையாக உள்ளனர் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக வைச்சேர்ந்த தலைவவர்கள் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் அனைத்து நாடார்களும் ஒன்றிணைந்து வெற்றி பெறச்செய்வோம் என்றும் மற்ற மாநிலங்களைப் போலத் தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டெமென்றும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் தமிழகம் தெலுங்கானா மற்றும் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானநாடார் அமைப்பின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *