Hamas Terrorist CCTV Video: இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற அதிர்ச்சி வீடியோ!

Advertisements

கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள கிப்ருட் நகரில் நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் வீடியோவை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலிலிருந்து தப்பியோட முயற்சித்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடமிருந்து தப்பியோடினார். பின் தொடர்ந்து சென்ற ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி அவரைச் சுற்றிவளைத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் சாலையருகே மண்டியிட்ட வாறு தன்னை உயிருடன் விட்டுவிடும்படி கெஞ்சினார்.

 

ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி இரக்கமின்றி இஸ்ரேலிய இளம்பெண்ணைச் சுட்டுக்கொன்றார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *