அஜித் சாருடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட் – நடிகை சிம்ரன்..!

அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்திருக்கிறார். விடாமுயற்சி படத்தை ஒப்பிடும போது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . பொதுவாக அஜித்திற்காகவே அவருடைய படத்தை ரசிகர்கள் விரும்பி பார்ப்பது உண்டு.

இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், ப்ரசன்னா, சுனில், ப்ரியா வாரியர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்தில் வரும் ப்ரியா வாரியரின் நடனக் காட்சிகள் ஒரு புறம் இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்க மற்றொரு புறம் நடிகை சிம்ரன் கேமியோ செய்திருக்கும் காட்சிகளும் வைரலாகி வருகிறது.’வாலி’, ‘உன்னைக் கொடு என்னைத் தருவேன்’ படங்களை தொடர்ந்து இப்படத்தில் அஜித்துடன் சிம்ரன் நடித்திருக்கிறார்.

அவருடைய கதாபாத்திரத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்தும் அஜித்துடன் நடித்ததுப் பற்றியும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருகக்கிறார் நடிகை சிம்ரன்.அவர், ”கேமியோ கதாபாத்திரமாக படத்திற்குள் வந்தேன். படத்திலிருந்து வெளியே செல்லும்போது உங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன்.

அஜித் சாருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்தது ப்ளாஸ்ட்!அவர், ”கேமியோ கதாபாத்திரமாக படத்திற்குள் வந்தேன். படத்திலிருந்து வெளியே செல்லும்போது உங்களின் அன்பைப் பெற்றிருக்கிறேன். அஜித் சாருடன் மீண்டும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்தது ப்ளாஸ்ட்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *