மாதவிடாய் காலத்தின் விடுமுறையின் போது ஊதியம் வழங்க மறுத்தது ஏன் ? மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி விளக்கம்.
கடந்த 13-ம் தேதி, மாநிலங்களவையில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு தொடர்பாக மனோஜ் குமார் ஜா எம்.பி கேள்வி எழுப்பினார். அப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி மாதவிடாய் என்பது ஒரு குறைபாடு அல்ல, இதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேவையில்லை” என அறிவித்தார். அச்சமயம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் நாடு முழுவதும் இந்த விவகாரம் பூதாகாரமாக பெண்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பதிலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை தேவை இல்லை எதற்காக கூறினேன் என்று பதிலளித்தார் அமைச்சர்.
காரணம் குறித்து பேசுகையில் நான் நாடாளுமன்றத்தில் பேசிய போது, எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினேன். ஏனென்றால் பணியிடத்தில் பெண்கள் பாகுபாட்டையும் துன்புறுத்தலையும் எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. ஆனால் கேள்வியே உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


