K. N. Nehru: குடிநீர் குழாய்கள் சீரமைப்பு பணிகளுக்கு 1000 கோடி ஒதுக்கீடு!

Advertisements

சென்னையில்  உள்ள் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளை சிஎம்டிஏ மேற்கொள்ளபட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் 1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் மக்களுக்குச் சீரான குடிநிர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் கே என் நேரு உறுதியளித்துள்ளார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அம்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள், சமுக தாகம் தீர்ப்போம், சுகாதாரத்தை காப்போம் என்ற தலைப்பில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூர் டன்லப் மைதானத்தில் நடைபெற்றது.

மண்டல குழுத் தலைவர் பிகே மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, இந்துசமய அறநிலையத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அமைச்சர் பி கேச்சேகர்பாபு, அம்பத்தூர் சட்ட் மன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் 771பேருக்கு 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் உதவி தொகைகளை வழங்கினர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நேரு, சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள், தளபதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வாரிய அலுவலகர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர் வடிகால் தொழிலாளர்கள் தற்போது வழங்கப்படும் ஊதியத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளேன்.

மேலும் தொழிலாளர்களின் தேவையை அறிந்து தமிழக முதல்வரின் உத்தரவைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என் உத்தரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே என் நேரு, சென்னையில்  உள்ள் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ள மெட்ரோ குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணிகளை சிஎம்டிஏ மேற்கொள்ளபட்டு வருவதாகவும், சீரமைப்பு பணிகளுக்காக முதல்வர் 1000 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் விரைவில் மக்களுக்குச் சீரான குடிநிர் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்தார். இதில் பகுதி கழக செயலாளர்கள் எம்டிஆர் நாகராஜ், டிஎஸ்பி ராஜகோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *