
பாரத ரத்னா சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளில் அவருக்கு எனது மனமார்ந்த அஞ்சலி. தேசத்தின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதே அவரது வாழ்க்கையின் முதன்மையானதாக இருந்தது. அவரது ஆளுமையும் பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று, தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, குஜராத்தில் ஏக்தா நகரில் உள்ள இந்தியாவின் மிக உயரமான படேல் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேசிய ஒற்றுமைப் படை பேரணியை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி : நகர்ப்புற நக்சல்கள் சாதியை வைத்து நாட்டைப் பிளவு படுத்த முயற்சிக்கின்றனர். நாட்டின் வளர்ச்சியையும் தடுக்கின்றனர். ஒற்றுமையாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்க முடியும் என்று வலியுறுத்துபவர்களை நகர்ப்புற நக்சல்கள் குறிவைக்கின்றனர்.
நகர்ப்புற நக்சல்களை மக்கள் தான் அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை கிழித்தெறிய வேண்டும், என எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்தார்.



