சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், மோசமான மாநிலமாக தமிழகம் உள்ளது – ஜி.கே.வாசன் பேச்சு

தென்னிந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில், மோசமான மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது என்று, கோவை-கோல்ட் வின்ஸ் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, கோல்ட் வின்ஸ் பகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மனித சங்கிலியிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்,

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும், போதைப் பொருட்கள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாநில பொதுச் செயலாளர் வி.வி.வாசன் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறை தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், போதைப்பொருள் பரவல் அதிகரித்து வருகிறது.

தென்னிந்தியாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் மிகவும் மோசமான மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது எனவும், கோவை மாணவி பாலியல் வழக்கு அதற்கான சரியான எடுத்துக்காட்டு எனவும் ஜி.கே.வாசன் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *