Mayiladudurai : வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம்..!

மயிலாடுதுறையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக திமுக சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடியாக வீட்டிற்கு சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.

இந்நிலையில், திமுக சார்பில் வாக்காளர் பட்டியல் பணிகள் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.இதில், மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா முருகன் தலைமையில் ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலையில்எம்எல்ஏ நிவேதா முருகன், எஸ்ஐஆர் பற்றி விளக்கி பேசினார்.

கழகத்தால் கொடுக்கப்பட்ட “பாக முகவர் குறிப்பேடு” மூலம் அனைத்து வாக்காளர்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும். குறிப்பாக, திமுக கட்சி வாக்காளர்கள், திமுக ஆதரவு வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மை வாக்காளர்களின் தகவல்கள் சேகரிக்க வேண்டும்.வாக்குகளை நீக்காமல் நமது பிஎல்ஏ2 நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்.என்ஒசி வழங்கப்படாத வட மாநிலத்தவர்களின் வாக்குகளை புதிதாக சேர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விளக்கி கூறப்பட்டது.

இதில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *