கவர்னரிடம் புகார் கொடுக்கும் அரசியல் கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகே விரகாலூரில் மனித உரிமைக் காப்பாளர் தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், தமிழகத்தில் தற்போது லஞ்சம் இல்லாத மக்களுக்கான ஆட்சியை முதலமைச்சர் விஜய் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், எவ்வித செலவுமில்லாமல் தற்போது அனைவருக்கும் அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் கூறினார். கவர்னரிடம் புகார் கொடுக்கும் அரசியல் கட்சிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, கூட்டம் முடிவடைந்தவுடன் சொந்த ஊர் மக்களுக்குப் பிரியாணி உணவு வழங்கி, கிறிஸ்துவ பங்கு தந்தையுடன் அமர்ந்து உணவருந்தினார்.



