‘தாய் கிழவி’ – 100-வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்!

நடிகை ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த ‘தாய் கிழவி’ திரைப்படம், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தில், சிங்கம்புலி, அருள்தாஸ் மற்றும் பாலசரவணன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

75 வயது மூதாட்டியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் இக்கதை, பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்று திரையரங்குகளில் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ‘தாய் கிழவி’ திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் படக்குழுவினர் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். இவ்விழாவின் சிறப்பம்சமாக, படத்தின் வெற்றிக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோர் இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கினர். ராதிகா சரத்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்ட இந்த விழா, படத்தின் வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடும் வகையில் அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *