
காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பகுதியில் நடந்த அதிமுக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இதுவரை 154 தொகுதிகளில் அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவித்தார்.
திமுகவுக்கும் த.வெ.க.வுக்கும் எதிர்க்கட்சியாக தான் வருவார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிதான் முதல்வர் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டார்கள் எனக் கூறினார்.
காங்கிரஸ் மாவட்ட தலைவர் உயிரிழக்கச் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் செல்லப்பெருந்தகை திமுகவின் தவறை சுட்டிக்காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து, செல்வபெருந்தகைக்கு அதிமுக பற்றி பேச அருகதை இல்லை எனவும் தெரிவித்தார்.

