
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மொஹ்சின் நக்வி இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஒன்றான கடாஃபி ஸ்டேடியம் பிப்ரவரி 7-ந்தேதி திறக்கப்படும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஐசிசி அதிகாரிகள், சேர்மன் ஜெய் ஷா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7-ந்தேதி பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடாஃபி மைதானத்தைத் திறந்து வைக்கிறார். தற்போது இறுதி கட்ட வேலைப்பாடு நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி 7-ந்தேதிக்குள் முடிவடையும்.
கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது.
ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என உறுதி அளித்தோம். வேலைகள் அனைத்தும் எப்படி முடிந்துள்ளது என்பதை உங்களால் பார்க்க முடியும்.
கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.
