Amit shah : அமித்ஷா தலைமையில் கிழக்கு மண்டல வளர்ச்சிக் குழுக் கூட்டம் !

ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் கிழக்கு மண்டல வளர்ச்சிக் குழுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல வளர்ச்சிக் குழுக் கூட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.

ஒடிசா முதலமைச்சர் மோகன்சரண் மாஜி, பீகார் துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்திரி, மேற்கு வங்க அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா ஆகியோருக்கும் ஹேமந்த் சோரன் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.

நான்கு மாநிலங்கள் சார்பில் கலந்துகொண்டவர்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை விளக்கியதுடன், அவற்றை நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்கும்படி மத்திய நிதியமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *