அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே மீண்டும் சத்தம் இல்லாமல் மோதல் வெடித்துள்ளது.முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கிவிட்டார் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அவரது சுற்றுப்பயணம் ஏழாம் தேதி கோவையில் தொடங்கியது
இந்தச் சுற்று பயணத்தில் அதிமுகவினர் மட்டுமல்லாது பாஜகவினரும் கூட்டம் கூட்டமாகக் கலந்து கொள்கிறார்கள்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்பட ஏராளமான பேர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்கிறார்கள் .இது மட்டுமல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி நத்தம் விஸ்வநாதன் காமராஜ் கடம்பூர் ராஜு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை முன்னாள் சபாநாயகர் தனபால் உட்பட அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு வருகின்றனர்
இதே சமயம் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய பலமாகப் பார்க்கப்படும் கே ஏ செங்கோட்டையன் இந்தச் சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை .அவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் சொந்த வேலை விஷயமாக அவ்வப்போது உடுமலை சென்று வருகிறார் என்பதை தவிர கட்சி கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்க்கிறார் . மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அறைகூவல்விடுத்து எடப்பாடி பழனிச்சாமி தொடங்கியிருக்கும் முக்கியமான கட்சி கூட்டங்களில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாமல் இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது
ஏற்கனவே இருவருக்கும் இடையே மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்து பின்னர் சில மாதங்கள் அமைதியான நிலையில் தற்போது மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



