Kulasekharapatnam: புதிய ராக்கெட் ஏவுதளம்!

Advertisements

குலசேகரபட்டினத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் புதிய ராக்கெட் ஏவுதளம்!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். அவர் ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை பாடியில் உள்ள பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்றார். உலக செஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்றதற்காகப் பிரக்ஞானந்தாவை பாராட்டிய சோம்நாத், சந்திரயான் மினியேச்சர் மாடலை அவருக்குப் பரிசாக வழங்கினார்.

பின்னர் தலைமை செயலகம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“முதலமைச்சரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. சந்திராயன் 3 மாதிரியை முதலமைச்சருக்கு அன்பளிப்பாக வழங்கினேன்.  குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் 2 ஆண்டுகளில் அமைப்பதில் முதலமைச்சரின் ஆதரவு வழங்கக் கேட்டுக்கொண்டுள்ளேன். இஸ்ரோ திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக முதல்வர் உறுதியளித்தார். ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 17 தங்கப்பதக்கங்கள் வாங்கியதற்கு வாழ்த்துகள்.”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *