ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையா் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டியில் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையா் பிரிவின் இரண்டாவது சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் டோபி சாமுவேல் உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய லாரன்சோ முசெட்டி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோபி சாமுவேலை வீழ்த்தினார். இதன் மூலம் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.




