Mumbai : பெண்கள் கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.!

Advertisements

மும்பையில் 13 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியாவில் 13 ஆவது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில், மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதிய நிலையில் 49-இல் ஆஸ்திரேலியாவும், 11-இல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இதை தொடர்ந்து, போட்டி நடைபெறும் நவிமும்பையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழையால் ஆட்டம் தடைப்பட்டால் ஆட்டம் மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நிலையில் இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *