சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மோசமான சாதனை படைத்த முகமது ஷமி..!

Advertisements

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் முகமது ஷமி மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டு அபார வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 241 ரன்கள் எடுத்தது. பின்னர், 242 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி சதமடித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்தப் போட்டிகளில் பல சாதனைகள் உருவாகியுள்ளன, மேலும் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அதிவேகமாக ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள் அடித்த வீரர், இந்தச் சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள் அடித்த முதல் வீரர், மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராகச் சதமடித்த முதல் வீரர் ஆகிய சாதனைகளை விராட் கோலி பெற்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *