Nagorno-Karabakh: மீண்டும் போர் பதற்றம்!

ஆர்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகோானோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அஜர் பைஜான் அறிவித்துள்ளது…

ஆர்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாகச் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆாமீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அந்தப் பிராந்தியத்தில் ஆர்மீனியாவும், அஜர்பைஜானும் படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.கடந்த 2020-இல் நடைபெற்ற போரில் சுமார் 6600 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், அஜா்பைஜான் கட்டுப்பாட்டில் இருக்கும் லச்சின் வழித்தடத்தில் சாலைப் போக்குவரத்தை அந்த நாடு முடக்கியதாக ஐ.நா.வில் ஆா்மீனியா குற்றஞ்சாட்டியது.இதன் காரணமாக அந்தப் பிராந்தியத்துக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாததால் அங்கு வசிக்கும் சுமாா் 1.2 லட்சம் போ் பட்டினியால் இறக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நடவடிக்கைமூலம் அஜா்பைஜான் இன அழிப்பில் ஈடுபடுவதாகவும் ஆர்மீனியா கூறியது.

ஆனால் இதனை அஜர் பைசான் மறுத்தது. இந்நிலையில், நகோானோ-கராபக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக அஜர் பைஜான் அறிவித்துள்ளது.இதுகுறித்து அஜா்பைஜான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நகோானோ-கராபக் பிராந்தியத்தில் கண்ணி வெடிகளில் சிக்கி 4 அஜா்பைஜான் வீரா்களும், பொதுமக்கள் 2 பேரும் உயிரிழந்தனர். அதனைத் தொடா்ந்து, அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

எல்லையில் ஆர்மீனிய படைகளின் நிலைகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த ராணுவ நடவடிக்கையின்போது நகோா்னோ-கராபக் பிராந்தியத் தலைநகரான ஸ்டெபனாகொ்ட் மீது சரமாரி குண்டுவீச்சு நடத்தப்பட்டதாக ஆா்மீனிய செய்தி நிறுவனஙகள் தெரிவித்தன.இது, கடந்த 2020-ஆம் ஆண்டைப் போலவே முழு போராக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *