எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று மோடி வரியை குறைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவாமாத்தூரில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார்.
அப்போது பேசியஅவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போகின்ற இடமெல்லாம் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஸ்டாலின் தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமண உதவி தொகையாக அரை சவரன் தங்க நகை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது என்றும் பெண்களை முன்னிறுத்தி ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தினார் என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் விலைவாசியை உயர்த்தி உள்ளதாகவும், ஸ்டாலின் ஆட்சியில் சம்பள உயரவில்லை ஆனால் ஊழல் மட்டும் உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டதிலிருந்து ஸ்டாலினுக்கு தூக்கம் போய்விட்டது என்றும் இந்தியாவை பதினோறு ஆண்டுகள் ஆண்டு கொண்டிருக்கிற ஒரு பிரதமராக மோடி இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.
உலக நாடுகளே திரும்பி பார்க்கக் கூடியப் பிரதமராக மோடி இருக்கிறார் என்றும் பாஜக அதிமுக குறித்து பேச ஸ்டாலினுக்கு எந்த தகுதி இல்லை எனக் கூறினார்.
மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கையை ஏற்று மோடி வரியை குறைத்துள்ளதாக தெரிவித்தார்.

