வட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை..!

Advertisements

பண்ருட்டி அருகே மகளிர் சுய உதவி குழுவில் கீழ் செயல்பட்டு வந்த ரேஷன் கடையை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டிற்கு மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்ததால் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் திருத்துறையூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை தற்போது கூட்டுறவுத் துறையில் இணைப்பதை அறிந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை காவல்துறையினர்,பண்ருட்டி வட்ட வழங்கல் ராஜலிங்கம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *