
56 ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இத்தாலி நாட்டின் துரின் நகரில் 56 ஆவது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், தர வரிசையில் முதல் இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.
இதை தொடர்ந்து, ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய சின்னர் 7-6 , 7-5 என்ற செட் கணக்கில் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்,



