Viral Meen Kulambu: விறால் மீன் மாங்காய் குழம்பு!

விறால் மீன் மாங்காய் குழம்பு!

நாம் வீட்டில் எத்தனையோ வகையான குழம்பு வகைகளை செய்திருப்போம் ஆனால் விறால் மீன் மாங்காய் குழம்பு அருமையாக இருக்கும்.அனைவரும் இந்த குழம்பை செய்து பார்த்தால் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

விறால் மீன் துண்டுகள் – 6
எண்ணெய்-தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம்-20
பூண்டு-20
வெந்தையம்-1/2 tsp
கறிவேப்பிலை-சிறிதளவு
தக்காளி-2
மாங்காய்-2
புளி-1 tbsp
மிளகாய் பொடி-1tbsp
கொத்தமல்லி பொடி-2tsp
மஞ்சள்-1tsp

செய்முறை:

விறால் மீனை நன்றாக கழுவி அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டடி கொள்ளவும்.

மாங்காவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தையத்தையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும்.


அதில் வெங்காயம்,பூண்டு,மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.பிறகு புளியை கரைத்து அதில் மிளகாய் பொடி,கொத்தமல்லி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து அதனுடன் மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவும்.

பிறகு மீனை சேர்த்து கொதிக்கவிடவும்.இப்போது விறால் மீன் குழம்பு தயார்.கடைசியில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் மனம் கிடைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *