பேயை விட AI-ஐ பார்த்துதான் பயமா இருக்கு..!

இந்த நவீன வாழ்க்கையில் பேய பார்த்து பயப்படுறத விட ஏஐ பார்த்து பயப்படுவது தான் அதிகமாகியுள்ளது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சைபர் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியபோது, முன்பு எல்லாம் வீட்டுக்குள் புகுந்து திருடுவார்கள் என்றும் ஆனால், தற்போது கைப்பேசி மூலமாக திருட ஆரம்பித்து விட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நவீன வாழ்க்கையில் பேய பார்த்து பயப்படுறத விட ஏஐ பார்த்து பயப்படுவது தான் அதிகமாகியுள்ளது என்று கூறினார். இதனால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சைபர் மோசடி சம்பவங்கள் நடந்தால் காவல்துறையின் 1930 என்ற உதவி எண்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *