
ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக வைத்து இருக்கின்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பாகியுள்ளது.
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி, வயிற்றில் இருந்த குழந்தையை ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லும் பயங்கர வீடியோ வெளியாகிக் காட்டுமிராண்டித்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்த நிலையில், சர்வதேச அளவில் தங்களுக்கு நல்ல இமேஜ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது புதிய வீடியோ ஒன்றை ஹமாஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை டெலிகிராம் ஆப் செயலியில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ராணுவ உடையில் கையில், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டு, துப்பாக்கியைக் கையில் தொங்கவிட்டவாறு ஹமாஸ் தீவிரவாதிகள் வீடியோவில் காணப்படுகின்றனர். ஒரு குழந்தைக்குக் காலில் கட்டுபோடுவது போன்ற காட்சியும் இடம் பெற்றுள்ளது. அழும் குழந்தையைத் தொட்டிலில் போட்டு ஆட்டுவது என்று காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வீடியோ முடியும்போது, ஒரு குழந்தைக்குத் தண்ணீர் கொடுத்து, பிஸ்மில்லா என்று கூறுமாறு வலியுறுத்துகின்றனர். குழந்தையும் பிஸ்மில்லா என்று கூறிவிட்டு, தண்ணீரை எடுத்துக் குடிக்கிறது. அதே குழந்தைதான் வீடியோவின் துவக்கத்தில் டேபிள் மீது அமர்ந்து, அழுது கொண்டு இருந்தது. அந்தக் குழந்தையின் காலில் ஹமாஸ் தீவிரவாதிகள் காயத்திற்கு கட்டு போடுகின்றனர்.
”ஹமாஸ் தீவிரவாதிகள் குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக வைத்து இருக்கின்றனர். அவர்களது அறைக்கு அருகே அந்தக் குழந்தைகளின் கொல்லப்பட்ட பெற்றோர் சடலம் இருக்கிறது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது. குழந்தைகளுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பயத்தில் அழுகின்றனர். இவர்கள்தான் தீவிரவாதிகள். இவர்களைத் தோற்கடிக்கப் போகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர்.
You can see their injuries,
hear their cries
and feel them trembling from fear as these children are held hostage in their own homes by Hamas terrorists and their parents lie there dead in the next room.These are the terrorists that we are going to defeat. pic.twitter.com/myDsGnOzT1
— Israel Defense Forces (@IDF) October 14, 2023


