Kanyakumari Medico’s Suicide: பேராசியர் பரமசிவம் கைது!

Advertisements

கன்னியாகுமரி மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில், பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசியர் பரமசிவம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியை சேர்ந்த சுகிர்தா சென்னையில் மருத்துவத்தில் இளநிலை முடித்து விட்டு மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். மேல் படிப்புக்காகக் கன்னியாகுமரி வந்த அவர், குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் மயக்கவியல் துறையில் முதுநிலை படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விடுதி அறையில் சுகிர்தா தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகக் குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலைக்கு முன்பு சுகிர்தா எழுதிய கடிதம் சிக்கி பரப்பை ஏற்படுத்தியது. அதில், பேராசியர் பரமசிவம் தன்னை உடல் ரீதியாகவும், மனதளவிலும் துன்புறுத்தியதாகவும், சீனியர் மாணவர்களான ப்ரீத்தி மற்றும் ஹரீஷ் தன்னை துன்புறுத்தியத்தாகவும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தின் அடிப்படையில் 3 பேர்மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவியின் லேப்டாப், செல்போன் ஆதாரங்களைத் திரட்டியதுடன், கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியர் பரமசிவத்தை அதிரடியாகக் கைது செய்தனர்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தலைமறைவான சீனியர் மாணவர்களான பிரீதிதி மற்றும் ஹரீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் கடந்த 5 ஆண்டுகளில் இதுபோல் சில மருத்துவ மாணவ, மாணவியர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளதாகவும், இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாமகவினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *