INDIA alliance: கூகுள் நிறுவனத்துக்குக் கடிதம்!

Advertisements

நடுநிலையுடன் செயல்பட கூகுள் நிறுவனத்துக்குக் கடிதம்!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மெட்டா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோருக்கு I.N.D.I.A கூட்டணி கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து  I.N.D.I.A கூட்டணி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:  அதில், ”ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்திற்கு உதவுவதில் வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கின் பங்குகுறித்து வாஷிங்கடன் போஸ்ட் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாகப் பாஜக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வாட்ஸ் குழுக்களைப் பயன்படுத்தி இந்தக் கீழ்த்தரமான, வகுப்புவாத பிரச்சாரம் செய்வது இதன் மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது. இதேபோல, பேஸ்புக்கிலும் நடக்கிறது.

இது எங்களுக்கு நீண்ட காலமாகவே தெரியும். தொடர்ந்து இதுபற்றிப் பேசி வருகிறோம். இந்தச் செயல்  எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்குகிறது. எனவே, குறிப்பாக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மெட்டா மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். சமூக பதற்றத்தை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *