பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல – முதலமைச்சர்!

Advertisements

ஈரோடு:

எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பழனிசாமி பொய் சொல்வது அவர் பதவிக்கு அழகல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையைத் திறந்துவிட்டதாகப் பழனிசாமி பொய் சொல்லுகிறார். சாத்தனூர் அணையைத் திறக்கும் முன்பு 5 முறை முன்னெச்சரிக்கை செய்யப்பட்டது.

சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

செம்பரம்பாக்கம் வெள்ள பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட பேரழிவு. ஒன்றிய அரசின் நிதிக்காகக் காத்திராமல் நாங்களே மீட்பு பணிகளைச் செய்து முடித்தோம் எனத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *