Israel Palestine War (History): ஒரு வரலாற்றுப் பார்வை!

பாலஸ்தீன-இஸ்ரேல் போர் ஒரு வரலாற்றுப் பார்வை.

பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அங்கு இப்போது நடப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்திப் பேசவே முடியாது. இது மகாத்மா காந்தியின் கூற்று…

பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால் அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன், இரண்டாவதாக அதற்குப் பொறுப்பேற்க  வேண்டியவர்கள்  நம்மிடையே  தோன்றியிருக்கும் இம்மதிரியான பயங்கரவாதிகள். விஞ்ஞானி ஐன்ஸ்டீன் கருத்து

உலகம் போற்றும் காந்தியும் ,ஐன்ஸ்டீனும் இப்படி தார்மீக கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை , உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது தினமும் ஊடகங்களில் செய்தியாகிறது. நியாயமான முடிவு காண முடியாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது. இதைப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ பிளவு பட்டிருக்கின்றன.

தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப்பரிணாமத்தையும் கொண்டு வரவில்லை. இது பற்றி நாகேஸ்நரி அண்ணாமலையின் நூல், பிரச்சினையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது.

இதிலிருந்து பாலஸ்தீனத்தில் ஏன் இவ்வளவு ரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து விவாதித்து, பிரச்சினை  தொடர்பான பல விஷயங்களை படித்தும் கேட்டும் அறிந்தும் பாலஸ்தீன-இஸ்ரேல்  போர் ஒரு வரலாற்று பார்வை என்ற நூலின் மூலம் அறியப்பட்டதிலிருந்து இன்று வரை தொடரும் அவலம் .தற்போது டிஜிட்டல் உலகத்தில் டிஜிட்டல் தாக்குதல் மூலமாக பேரழிவு தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *