200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் என்றும், சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம் பேச்சு

Advertisements

விடியல் பயணம், கலைஞர் மகளிர் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது என்றும், 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் என்றும், இராமநாதபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவத்தார்.

 

இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. மற்றும் திமுக இளைஞரணி சார்பில், தமிழ்நாடு ஓரணியில் என்ற கருத்தரங்கம், தனியார் மஹாலில் நடைபெற்றது, இதில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பங்கேற்று பேசினார். அப்போது, கட்சி நிர்வாகிகளிடம், வரும் சட்டமன்ற தேர்தலில், தங்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்தும், வெற்றிவாகை சூடுவதற்கு, திமுகவின் சாதனைகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்வது குறித்த யுக்திகளையும் எடுத்துரைத்தார்.

 

நிகழ்ச்சியை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா-முத்துராமலிங்கம் செய்திளாளர்களை சந்தித்து பேசினார்.

 

அபபோது, விடியல் பயணம், கலைஞர் மகளிர் உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது என்றும், 200 தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *