நக்ஸல்களை ஒழிக்கும் வரை மத்திய அரசு ஓயாது – அமித்ஷா உறுதி

Advertisements

2026 மார்ச் 31ஆம் நாளுக்குள் நக்சல் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது உறுதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலக் காவல்துறையினரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், தலைக்கு ஒரு கோடி ரூபாய் விலை வைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் உட்பட நக்சல் இயக்கத்தினர் பத்துப் பேரைச் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, நக்சலைட்டுகளுக்கு எதிராக நமது பாதுகாப்புப் படையினரின் மற்றொரு வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சிய நக்சலைட்டுகளும் குறித்த காலத்துக்குள் அடிபணிந்து விடுவர் என்பதால் முன்பே திட்டமிட்டபடி 2026 மார்ச் 31ஆம் நாளுக்குள் நக்சல் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது உறுதி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *